உலக செய்திகள்

ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலே தேர்வு…


ஈராக் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் ஜூலை 12 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஈராக் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

துருக்கி அரசால் 10இற்கும் மேற்பட்ட ஊடக அமைப்புக்கள் முடக்கம்

wpengine

உடல் அடக்கத்திற்கான அனுமதி வரவேற்கத்தக்கது

wpengine

அதிகரித்தது கச்சா எண்ணெய் விலை..!

wpengine