உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை…


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரி தேரர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் பெங்கமுவே நாலக, தல்கமுவே சுதிரானந்த, தியசென்புர விமல, மாகல் கந்தே சுதந்த ஆகிய தேரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படவுள்ள கடிதத்தில் மேற்குறிப்பிட்ட தேரர்கள் கையெழுத்து இட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தில் இறுதியில்;

“உங்களை கொலை செய்ய வந்த நபருக்கு வாழ்வளித்து விடுவிக்கும் அளவுக்கு நீங்கள் இளம் மனம் படைத்த தலைவராவார். அது ஒரு முழு சமூகத்தினருக்கும் முன்மாதிரி ஆகும். தற்போது உங்களுக்கு மற்றுமொரு உணர்வுபூர்வ காரணம் எஞ்சியிருக்கிறது. அவ்வாறெனின், கிராமத்தில் வளர்ந்து, எமது நாட்டின் முதல் பிரஜை என்ற ரீதியில், பெளத்த பயிற்றுவிப்பாளர் என்ற வகையில் யோசனை செய்து தங்களது அதிகாரங்களின் அடிப்படையில் ஞானசார தேரரை முழுமையாக விடுதலை செய்யும் வரை அனைத்து பெளத்த சமூகத்தினரும் காத்திருக்கின்றனர். உங்களுக்கு தலதா தேரர்களது ஆசிர்வாதம் கிட்டட்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீ.சு கட்சி மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்களின் கட்சி கூட்டம்…

wpengine

தேசிய அரசுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அமைச்சுப்பதவி வழங்க முடியாது – ஜனாதிபதி

wpengine

உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு கட்டுபாட்டு விலை…

wpengine