உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…


இந்தோனேசியாவில் இன்று(02) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த தீவில் வசித்து வரும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

wpengine

இஸ்லாமிய நிலப் பகுதிகள் அனைத்திலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை… [VIDEO]

wpengine

மலேசிய முன்னாள் பிரதமர் கைது…

wpengine