உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்…


ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

ஐ.நா. சபையை அனைத்து மக்களுக்கும் நெருக்கமடைய செய்தல், நீதி, அமைதி மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும், பகிர்ந்த பொறுப்புக்களும் எனும் தொனிப்பொருளில் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இதன் பிரதான கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தியிருந்தார்.

அதேவேளை அரசியல் தலைவர்கள் சிலரையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகளையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாஜுதீன் கொலை குறித்த CCTV காணொளிப்பதிவுகளை கண்டுபிடிக்க எடுத்த கனடா பரிசோதனை தோல்வியில்..

wpengine

எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளது: எரிசக்தி அமைச்சு

wpengine

நான் குற்றவாளியாக இருந்தால் மரண தண்டனையினை வழங்குங்கள் [VIDEO]

wpengine