உள்நாட்டு செய்திகள்

DIG நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு…


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ கொலை சூழ்ச்சி தொடர்பிலான தொலைபேசி உரையாடல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இன்று(28) முற்பகல் 10.00 மணியளவில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று(27) உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையை மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இணைப்பு செய்தி:

DIG நாலக சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு…
https://tamil.fastnews.lk/59906/

Related posts

தனியார் துறையினர் சம்பளம் : அரசு தீர்மானம்

wpengine

மைத்திரி – ரணில் : ஆணைக்குழு அழைப்பு

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 சாரதிகள் கைது

wpengine