உலக செய்திகள்

பிலிப்பைன்சில் கடும் மழை, நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு


பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் பெய்த கடும் மழை காரணமாக நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘மங்குட்’ புயல் பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அங்குள்ள செபு தீவில் பெய்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Related posts

அமெரிக்காவை வதைக்கும் காட்டுத்தீ

wpengine

இந்திய பெருங்கடலில் சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம்

wpengine

குடிமக்களுக்கு பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாமென அமெரிக்க எச்சரிக்கை

wpengine