உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை…


டீசல் விலை அதிகரித்தமை காரணமாக பேரூந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தனியார் பேரூந்து சங்கங்களுக்கு இடையில் இன்று(19) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

போக்குவரத்து அமைச்சில் இன்று காலை நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேரூந்து கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தனியார் பேரூந்து சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

கூர்த்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது பயனற்ற நிலையிலுள்ள விலைச் சூத்திரத்தை மீள அமுல்படுத்துவது தொடர்பில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு – குடியகல்வு திணைக்களம்

wpengine

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…

wpengine

Update – கோட்டாபய’வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை..

wpengine