வணிகம்

அலங்கார மீன் தொழிற்துறைக்காக செயலணி அமைக்க நடவடிக்கை…


அலங்கார மீன் தொழிற்துறைக்காக ஒரு செயலணியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணி கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சியின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

அலங்கார மீன் ஏற்றுமதியாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நீர் உயிரின அபிவிருத்தி ஆகிய துறைகளில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதில் இந்த செயலணி செயற்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அலங்கார மீன் தொழிற்துறையைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை வழங்குதல் போன்ற விடயங்கள் இந்த செயலணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை..

wpengine

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் யூனுஸிற்கு அழைப்பு.

wpengine

விமான நிலையங்களில் தீப்பிடிக்கும் Samsung galaxy note 7 – உற்பத்தியினை நிறுத்தியது.

wpengine