உள்நாட்டு செய்திகள்

இறக்குவானையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…


இறக்குவானை வடக்கு மானாபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine

இறுதி 15 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் அறிவிப்பு

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine