உலக செய்திகள்

இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரயில்நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு…


அமெரிக்காவில் 2011-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலில் சேதமடைந்த சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தியதில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்தபோது அதன் அருகே இருந்த சுரங்க ரயில் நிலையமும் பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த ரயில் நிலையம் சீரமைக்கும் பணியில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் குறித்த ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

Related posts

தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை…

wpengine

சைபர் தாக்குதலுக்கு பதிலடியாக பொருளாதார தடைகள்

wpengine

தேசிய கீதத்தை மாற்றிய அவுஸ்திரேலியா

wpengine