உள்நாட்டு செய்திகள்

வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு – புத்தளம்…



புத்தளம் மாவட்டத்தில் சுயதொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால், புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 411 பயனாளிகளுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (07) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

புத்தளம் பிரதேச செயலாளர் சஞ்சீவனி ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, புத்தளம் நகரசபை உறுப்பினர்களான டில்ஷான், அனுலா குமாரி, ஜமீனா இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக், ரிபாஸ், ரிஜாஜ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Related posts

கைதி மீது துப்பாக்கி பிரயோகம்

wpengine

உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

wpengine

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு குறித்து அரசுக்கு நம்பிக்கையில்லை!

wpengine