உள்நாட்டு செய்திகள்

மகரகம நகர சபை ஊழியர்கள் பணி தவிர்த்து எதிர்ப்பு போராட்டத்தில்..



மகரகம நகர சபையின் தலைவர் விராஜ் பியரத்னவினால் நான்கு ஊழியர்களுக்கு தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு நகர சபையின் அனைத்து ஊழியர்களும் தத்தமது அன்றாட பணிகளிலிருந்து விலகி இருக்கின்றனர்.

குறித்த நான்கு ஊழியர்களும் நேற்று(06) இரவு மதுபானம் அருந்துவதாக நகர சபைத் தலைவருக்கு தகவல் கிடைத்ததையடுத்து நால்வரையும் சபைக்கு அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக குறித்த நகர சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த அந்த ஊழியர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அந்த நான்கு ஊழியர்களுக்கும் எச்சரிக்கை செய்த போதிலும் தாக்குதல் நடத்தவில்லை என நகர சபையின் தலைவர் விராஜ் பியரத்ன கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

wpengine

கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணத்தில் மேலும் தாமதம் – ரொய்ட்டர்ஸ்

wpengine

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு..

wpengine