ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பேரணி 02ம் பாகம் – “மக்கள் சக்தி கண்டிக்கு” விரைவில்…


அரசுக்கு எதிராக கொழும்பில் நேற்று(05) மாலை ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று(06) விடிகாலை வரை தொடரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்த போதும் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது சமகால அரசியலில் நகைப்புக்குரியது என அரசியல் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

இது குறித்து ஒன்றிணைந்த எதிரணியின் முக்கிஸ்தர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வினவியபோது;

“கொழும்பு நகரை முடக்குவதே எமது பிரதான நோக்கமாக இருந்தது. அந்த இலக்கை நாம் அடைந்தோம். கொழும்பிலுள்ள அலுவலகங்களை மூடச் செய்தோம். பாடசாலைகளை மூடச் செய்தோம்.. கொழும்பு நகரை ஸ்தம்பிக்கச் செய்துகாட்டி எமது இலக்கை நாம் சாதித்தோம்.

இலங்கை வரலாற்றில் 12மணி நேரமாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. நாம் மிகவும் அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த பின்னர் நள்ளிரவுடன் கலைந்து சென்றோம். இத்தோடு நாம் நிறுத்தப் போவதில்லை. அடுத்து கண்டி உட்பட நகரங்களுக்கு இந்த ஆர்ப்பாட்டங்களை விஸ்தரிக்கவுள்ளோம்.” என்றார்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி எண்ணெய் மற்றும் பார்ம் ஒயில்..

wpengine

ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இரத்து செய்யக் கோரி மனு…!

wpengine

சல்மானின் வழக்கு ஆவணங்களை இழந்த அரசு

wpengine