உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப் பூர்த்தி இன்று…


ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்றாகும்.

இந்நிலையில், பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

1946ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்டது.

1948ம் ஆண்டு நாட்டின் முதலாவது பிரதமராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரணவுக்கு பதில் அமைச்சர் பதவி..

wpengine

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்து விஜயம்

wpengine

கஞ்சிபானி இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை

wpengine