ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இன்றைய பேரணியில் கைதாகவுள்ள 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் இவர்கள் தான்…


ஒன்றிணைந்த எதிரணியினால் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டால் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக கடந்த (03)ம் திகதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருவாத்தோட்டை பொலிசாருக்கு நீதிமன்றம் வழங்கிய அறிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, குணசேகர, அசங்க நவரத்ன ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts

சூரியனை ஒத்த மற்றுமொரு சூரியன் கண்டுபிடிப்பு

wpengine

கோட்டாபயவிற்கு ஆதரவு வழங்க சந்திரிக்கா மறுப்பு?

wpengine

ஊரடங்கு தொடர்பிலான முக்கிய அறிவித்தல் : உடனடி PCR பரிசோதனைகளுக்கு GMOA கோரிக்கை

wpengine