உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 இலத்திரனியல் கடவைகள் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி…


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10 இலத்திரனியல் கடவைகளை நிர்மாணிப்பது தொடர்பில், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பிரயாணிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காகவே குறித்த இந்த இலத்திரனியல் கடவைகள் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமான நிலையத்தில் தற்காலிக பிரயாணிகள் நிலையமொன்றையும் அமைப்பதற்ற்க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

A/L மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

wpengine

பிரதியமைச்சர் ரஞ்சனின் குரல் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine