உள்நாட்டு செய்திகள்

சிறப்பாக செயற்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு இன்று…


2016ம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

குறித்த இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிதியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள 837 மொத்த அரச நிறுவனங்களில் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பல்வேறு பொருட்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உயர் செயற்பாடுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு இந்த விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அரச கணக்காய்வு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு இந்த வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை மாணவர்களை பங்குகொள்ள செய்த கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை…

wpengine

மரண தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றில் 10 மனுக்கள்

wpengine

UPDATE – கெசல்வத்தை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது.

wpengine