உலக செய்திகள்

பாடசாலைகளில் செல்போன் பயன்படுத்த தடை….


பிரான்ஸ் நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலை பாடசாலைகளில் இடைவேளை நேரம் உட்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் பேரிடர் காலங்களிலும் மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைகளுக்கு செல்லும் போது மாணவர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை உயர் நிலைப்பள்ளிகளும் தாமாக முன்வந்து செயல்படுத்தலாம். தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய கப்பல்…

wpengine

ஈரான் வெள்ளம் – இதுவரை 19 பேர் உயிரிழப்பு…

wpengine

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் உத்தரவுகள்

wpengine