Uncategorized

நாடளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை..


கொழும்பிற்கு அப்பாலுள்ள நகர பகுதிகளில் தொழில் முயற்சியாளர் மற்றும் பட்டதாரிகள் எதிர்பார்க்கும் தகவல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கான நடைமுறை தகவல் தொழில்நுட்பம், வர்த்தக செயற்பாட்டு முகாமைத்துவம் தொடர்பாக தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் கீழ் எதிர்வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் றுகுணு பல்கலைக்கழகத்தில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறும். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இணைந்து தென்மாகாண சபை இந்த வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

மாத்தறை றுகுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 350 பட்டதாரிகளும் தென்மாகாணத்தைச் சேர்ந்த 150 தேசிய தொழில் முயற்சியாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். இதனுடன் இணைந்ததாக தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வொன்று இன்றும் காலை 9.00 மணிக்கு மாத்தறையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

youtubeக்கு இணையாக Vimeo

wpengine

இப்படியும் பூமியில் ஓர் குட்டி தேவதை

wpengine

‪#‎வாழைச்சேனை‬ வைத்தியசாலையில் சுகயினமுற்று வரும் நோயாளிகளுக்கு “லொல் லொல்” என்று மருந்து வழங்கும் மருந்தகர்

wpengine