உள்நாட்டு செய்திகள்வணிகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி



உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி டபிள்யு ரி ஐ (WTI) வர்க்க மசகு எண்ணெய் பெரல் ஒன்று 50.95 அமெரிக்க டொலருக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேன்ட் வர்க்க மசகு எண்ணெய் 57 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய், எரிவாயு, தங்கம், வெள்ளி என்பவற்றின் விலை வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களிலும் எரிபொருள் விலை மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தால் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)

Related posts

மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு – இளைஞன் பலி..!

wpengine