உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்…


வங்காள விரிகுடாவை அண்டிய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் 4 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(29) நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நேபாளம் காத்மண்டுவில் நடைபெறவுள்ள இந்த மாநாடு வங்காள விரிகுடாவை சமாதானமான, பேண்தகு வலயமாக உருவாக்குதல் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.

நேபாள விஜயத்தின்போது ஜனாதிபதி, நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டார் (Bidhya Devi Bhandar) மற்றும் பிரதமர் கே.பி. ஒலி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts

பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம்

wpengine

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

wpengine

நிஷாந்த தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தரவு

wpengine