உள்நாட்டு செய்திகள்

தி.மு.க’வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் தெரிவு…


தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திமுக பொதுக்குழு இன்று(28) காலை கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் கூடியது.

இதில், கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச் செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவித்தார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹிலாரி கிளிண்டனை விட டிரம்ப் 8 புள்ளிகள் பின் தங்கிய நிலையில்..

wpengine

கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளை(14) ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம்..

wpengine

தேர்தல் சீர்திருத்த இறுதி முடிவு 15 அன்று வெளியாகும்.

wpengine