உள்நாட்டு செய்திகள்வணிகம்

‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ – 30 ஆம் திகதி ஆரம்பம்…


இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ எனும் தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகி 31 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இக்கருத்தரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரை ஆற்றவுள்ளதாகவும், இதில் 100 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் பங்கேற்கவுள்ளதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

மேலும் இக்கருத்தரங்கிற்கு சார்க் நாடுகளின் இராணுவத் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அரசியலமைப்பு சபையை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு சபாநாயகருக்கு விஜயதாச கோரிக்கை..

wpengine

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி – ரிஷாத்

wpengine

தனியார் கம்பனி பதிவுக் கட்டணங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது..

wpengine