வணிகம்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை..


சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க தெரிவித்துள்ளார்.

எனினும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு, நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்படுகின்றன.

இதனடிப்படையில், விலைத் திருத்தம் அவசியமானதா என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் கீழ் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

விமான நிலையம் தொடர்பில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நடமாடும் சேவையின் காலம் நீடிப்பு

wpengine