உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயுவின் விலையானது ரூ. 158 இனால் அதிகரிப்பு…


சமையல் எரிவாயுவின் விலையானது நாளை(25) முதல் அதிகரிக்கவுள்ளதாக வாழ்க்கை செலவுக் குழு தீர்மானித்துள்ளதாக குறித்த குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 12.5Kg சமையல் எரிவாயுவின் விலையினை 158 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சமையல் எரிவாயுவின் புதிய விலையானது 1696 ரூபாவாக அறிவிக்கப்படவுள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பினை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பிற்கு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் சமையல் எரிவாயுக் கொள்கலன் ஒன்று 245 ரூபாவால் அதிகரித்து கடந்த ஜூன் மாதம் 138 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

R.Rishma

Related posts

Update – இராணுவ முகாமின் திடீரென தீ பரவல் – கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதை மூடப்பட்டுள்ளது

wpengine

இணையத்தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்ய முடியும்…

wpengine

இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் தெமட்டகொட “டான் பிரியசாத்” கைது.

wpengine