உள்நாட்டு செய்திகள்

பேருந்து பணிப்புறக்கணிப்பு தோல்வியில்….



இன்று(16) சில தனியார் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும் பெரும்பாலான பேருந்துகள் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலை நிறுத்தத்தில் பேருந்து சாரதிகளும், பேருந்து நடத்துனர்களும் இணைந்திருந்தாலும், பேருந்து உரிமையாளர்கள் இதில் பங்கேற்கவில்லை.

இந்த வேலை நிறுத்தம் சில வீதிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருப்பதால், பொதுப் போக்குவரத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபையின் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துகிறது.

களுத்துறை, காலி, மாத்தறை பிரதேசங்களுக்கான கூடுதலான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து சேவையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை – காலி ஆகிய பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கான சொகுசு பேருந்து போக்குவரத்தும் கூடுதலாக இடம்பெறுகிறது.

Related posts

இனி மாவட்ட செயலகங்களில் கடவுச்சீட்டு பெறலாம்!

wpengine

மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணை

wpengine

புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என வெளியான செய்தியை மறுக்கிறேன்.. – பிரதமர்

wpengine