உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

துடுப்பாட்ட வரிசை முக்கியமல்ல.. எப்போதும் களமிறங்கத் தயார்… – தனஞ்சய கருத்து.


தென்னாபிரிக்க அணியுடனான நேற்றைய(14) இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணியானது 03 விக்கெட்களுக்கு பெற்றி பெற்றது.

தினேஷ் சந்திமால் 33 பந்துகளுக்கு ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களையும், அவரோடு இணைந்து தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றிருந்ததோடு, தசுன் ஷானக 16 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் லக்ஷான் சந்தகென் 19 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய டி சில்வா தலா 02 விக்கெட்களையும் பெற்றிருந்தார்.

போட்டியின் பின்னர் தனஞ்சய டி சில்வா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

“நான் சிறுவயதில் மூன்று நான்கு ஆகிய இடங்களிலேயே துடுப்பெடுத்தாடினேன்.. ஆனால், சர்வதேச போட்டிகளில் தனக்கு வழங்கப்படும் இடங்களில் துடுப்பெடுத்தாட தயாராகவே உள்ளேன். போட்டிக்கு முன்னர் இவ்விடத்தில் தான் துடுப்பெடுத்தாட வேண்டும் என கூறப்படுகின்றது.. அதற்கேற்றார் போல், நான் என்னை தயார் நிலைப்படுத்திக் கொள்வேன் . சிலருக்கு அது கஷ்டமாக இருக்கும். சிலரால் முடியும். அதற்கு நான் என்னை தயார் படுத்தியுள்ளேன்”

Related posts

இம்ரான் இலங்கைக்கு

wpengine

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலைகளுடன் ஒருவர் கைது

wpengine

இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

Azeem Kilabdeen