உள்நாட்டு செய்திகள்

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்…


இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு தரப்பிடமிருந்தும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள கருத்துகளை கவனத்திற்கொண்டே, இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஓய்வுபெற்ற பொருளியல் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யூ.டீ. லக்ஷ்மன் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழக்கத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் சிறிமெவன் கொழம்பகே, களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் அஜிதா தென்னகோன், சுயாதீன ஆலோசகர் கலாநிதி சனத் ஜயனெத்தி, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் ஆர்.ஏ.ஜயதிஸ்ஸ ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அம்பேகமுவ மூன்றாக பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனு ஒத்திவைப்பு..

wpengine

நாளை புத்தளம் ரயில் பாதையில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

wpengine

கொழும்பு மாநகரசபையின் உறுப்பினறான மஹிந்த கஹந்தகம கைது

wpengine