உள்நாட்டு செய்திகள்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களுக்கு பூட்டு…


ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் இடையே சின்னம்மை நோய் பரவி வருகின்றமையினால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிஹிந்தலை வளாகத்தில் நடாத்தி செல்லப்படும் சமூகவியல் மற்றும் மானுடவியல், பயன்முக அறிவியல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே நேற்று(08) பிற்பகல் முதல் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பீடங்களின் 44 மாணவர்களுக்கு சின்னம்மை நோய் பரவியுள்ளதாகவும், மேலும் சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை திரும்பினார்

wpengine

பங்களாதேஷ் தீவிரவாத தாக்குதல் – சாகிர் நாயக் பதிலடி

wpengine

புதிய கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…

wpengine