உலக செய்திகள்

வெனிசுலா ஜனாதிபதி கொலை முயற்சியில் தொடர்புடைய 6 பேர் கைது…


வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சியில் நகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. .

அந்நாட்டின் இராணுவத்தின் 81-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நிகோலஸ் மதுரோ நேற்று கலந்து கொண்டார். அவர், தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் பேசி கொண்டிருந்தபொழுது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) வெடிக்க செய்யப்பட்டன.

இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். எனினும், பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்வங்களில் தொடர்புடைய 6 பேரை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

இதுகுறித்து வெனிசுலா உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் கூறுகையில், தாக்குதல்தாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைகளில் இருந்து முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

பேரூந்து விபத்தில் 29 பேர் உயிரிழப்பு

wpengine

மக்களவைத் தேர்தல் – இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(18)…

wpengine

ஆஸியின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் தெரிவு…

wpengine