உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று…


எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று(06) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இன்று(06) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில், அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அந்தத் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவியைப் பெற்றுத் தருமாறு எந்தவொரு தரப்பினரும், தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி பதவியை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு வழங்க வேண்டுமென்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற நிலையியல் கட்டளையின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு கூட்டு எதிரணிக்கு எந்த வாய்ப்பும் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் நிதி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப்

wpengine

வட மேல் மாகாண தனியார் கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine

17 வயது சிறுமி துஸ்பிரயோகம்! 22 வயதுடைய பெண்ணின் தந்தை கைது: வெளிவந்த பின்னணி

News Editor