உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

1000CC இற்கு குறைந்த வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு…


1000CC இற்கு குறைந்த சாதாரண மோட்டார் வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரியினை அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் குறித்த மோட்டார் வாகனங்கள் இலங்கைக்கு அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாலேயே நிதி அமைச்சு மேற்கண்ட தீர்மானத்தினை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி;

சாதாரண 1000CC இற்கு குறைந்த வாகனங்களுக்கு முன்னர் 14 இலட்சம் ரூபா வரி அறவிடப்பட்டிருந்த நிலையில் புதிய வரியாக 15 இலட்சம் ரூபா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 1000CC ஹைப்ரிட் கார்களுக்கான வரியானது இதற்கு முன்னர் 8.5 இலட்சமாக இருந்த நிலையில் தற்போது 12.5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

க.பொ.த. உயர்தர செயற்பாட்டுப் பரீட்சைகள் இம்மாதம் ஆரம்பம்.

wpengine

அரச வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தினால் கட்டணம் 1 லட்ச ரூபா

wpengine

இலங்கையின் பௌத்த மத பீடங்கள் இரண்டு ஒன்றிணைந்தது

wpengine