உலக செய்திகள்

மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது…


மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேருக்கு காயம் அடைந்துள்ளதுடன், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக டுராங்கோ மாகாண கவர்னர் ஜோஸ் ரோசாஸ் ஊடங்களிடம் தெரிவித்துள்ளார்.

புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் உடனடியாக தரையிறப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழவில்லை’ எனவும் தெரிவித்தார்.

Related posts

கட்டார் மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் – சவுதி மற்றும் அதன் கூட்டணி அறிவிப்பு..

wpengine

மல்லையாவிடம் இருந்து 12% வட்டியுடன் 9,853 கோடி வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு…

wpengine

அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் மடிக்கணணி எடுத்துச் செல்ல தடை..

wpengine