உள்நாட்டு செய்திகள்

சுமார் 2 இலட்சம் மக்கள் வறட்சியால் பாதிப்பு…


நாட்டின் 9 மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுமாயின் அது குறித்து அறிவிக்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இடர்முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி, தமது பிரச்சினை குறித்து அறியத்தர முடியும் என இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

W.M.மெண்டிஸ் என்ட் கம்பனியின் நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…

wpengine

உயர் தர பரீட்சை பெறுபேறு தாமதமடையும்

News Editor

பிரதமர் குறித்து ACMC இனது தீர்மானம் இன்று(03)…

wpengine