உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் வழக்கு செப்டம்பர் வரையில் ஒத்திவைப்பு…


எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(25) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் சிரேஷ்ட அரச சட்டமா அதிபர் வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

இலங்கையருக்கு பிரஜாவுரிமை குறித்த ஜெயாவின் கருத்துக்கு ஜனாதிபதி பதிலளிப்பு

wpengine

கொழும்பில் வலுக்கும் கொரோனா

wpengine

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

wpengine