கேளிக்கை

Dragon வடிவில் முடி வெட்டிய பிரபல நடிகை – 3 மாதம் பயிற்சி…



‘அனேகன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அமைரா தஸ்துர் அடுத்து ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தி படங்களிலும் நடிக்கிறார். புதிய படமொன்றில் தலை முடியை நவீனமாக வெட்டி நடிக்கிறார்.

இதற்காக அவர் முடிவெட்டுவதற்கு ஹேர்ஸ்டைலிஸ்ட்டான அழகு நிபுணர் ஒருவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார். அத்துடன் அழகு நிபுணர் தனது தலைமுடியை டிராகன் ஸ்டைலில் வைத்திருந்ததை கவனித்த அமைரா, அதேபோல் தனது தலை முடியையும் மாற்றும்படி கேட்டார்.

அதை ஏற்று அவருக்கு டிராகன் கட் வைத்து தலைமுடியை கத்தரித்துவிட்டார். இதுபற்றி அமைரா கூறும்போது,’பட கதாபாத்திரத்துக்காக ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவரிடம் தலை முடியை ஸ்டைலாக கட் செய்வதற்கு 3 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

தற்போது என்னால் கர்லிங், ஸ்டிரைட்னிங் போன்ற பலவித ஹேர் ஸ்டைலை யாருக்கு வேண்டுமானாலும் செய்யமுடியும். எனது இணைய தள பக்கத்தில் என் படம் சம்பந்தப்பட்ட விவரங்கள் பற்றியே பகிர்ந்து வந்தேன்.

இனி அதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மெசேஜ் பகிர உள்ளேன். பிரபல நடிகர் ஒருவரின் அட்வைஸ் ஏற்று இந்த முடிவை எடுத்திருக்கிறேன்’ என்றார்.

 

Related posts

பிரபாசுடன் இணைவாரா அனுஷ்கா?

wpengine

உசேன் போல்ட் இனை தோற்கடிக்க புதிய (B)பட்டா..

wpengine

சர்கார் சிறப்பு காட்சிக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு…

wpengine