உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி வழிகாட்டலில் கிராம சக்தி மக்கள் இயக்க குழு கூட்டம் இன்று…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய நிகழ்ச்சி திட்டமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் சபரகமுவ மாகாண வழிப்படுத்தும் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (25) இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கிராம சக்தி மக்கள் இயக்கம் சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அதன் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அவற்றை தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

தங்கிவாழும் மனநிலையிலிருந்து விடுபட்டு மக்கள் சுய முயற்சியில் எழுந்திருப்பதற்கான வழிகாட்டலையும் உதவியையும் வழங்கும் திட்டம் என்ற வகையில் இதுவரை நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வறுமை ஒழிப்பு மக்கள் இயக்கங்களில் இருந்து கிராம சக்தி இயக்கம் வேறுபட்டு விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளும் பணிப் புறக்கணிப்பிற்கு ஆயத்தம்..

wpengine

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ

wpengine

வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பாணை

wpengine