உலக செய்திகள்

இந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள்…


பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். ருவாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

ருவாண்டா அரசு, ‘கிரிங்கா’ என்ற பெயரில் ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்துக்கு இந்தியாவின் சார்பில் இலவசமாக 200 பசுக்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு பசுக்களை வழங்குகிறார்.

ருவாண்டாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று உகாண்டா செல்லும் பிரதமர் மோடி அந்த நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிலி இராச்சியத்தை வாட்டிய காட்டுத்தீ

wpengine

ஆங் சான் சூகியின் சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு..!

wpengine

பாகிஸ்தான் எயார்லைன்சிற்கு சொந்தமான விமானம் 47 பயணிகளுடன் விபத்திற்குள்ளானது..

wpengine