உலக செய்திகள்

முதன் முறையாக செல்போனில் இணைய வசதி…


50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இணைய சேவை பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

பல மாற்றங்களை கண்டிருக்கும் கியூபா இப்போது தான் முழு இணைய சேவை (இன்டர் நெட்) வசதியை பெற உள்ளது. இந்த மாற்றத்துக்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.

எதிரி நாடான அமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளது.

தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் மட்டுமே உள்ளதுடன் பயன்படுத்தும் நெட்வொர்க்கும் மிக மெதுவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நெட் வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் கிடையாது. ஏனெனில் அங்கு தொலை தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

Related posts

கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

wpengine

இலங்கைக்கான பயண எச்சரிக்கை

wpengine

பாப்பரசருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

wpengine