கேளிக்கை

முதல்முறையாக சூர்யா படத்தில் தனுஷ் பாடல்…


செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் இந்த படத்தில் ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே யுவன் இசையில் தனுஷ் பல பாடல்களை பாடியிருக்கும் நிலையில், சூர்யா நடிக்கும் படத்தில் தனுஷ் முதல்முறையாக ஒரு பாடலை பாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ஜெகபதிபாபு வில்லனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Related posts

AL AAN TV பெண் தொகுப்பாளர் மீது விசாரணை…

wpengine

ஒரே தினத்தில் போட்டிபோட தயாராகும் தனுஷ், சிவா…

wpengine

‘மாயவன்’ இரண்டாம் பாகம் வருகிறது

wpengine