உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று உலக வனாந்தர வார மாநாட்டில் உரை…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(16) இத்தாலியின் ரோம் நகரில் 6வது உலக வனாந்தர வார மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

“நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு வனாந்தரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய பங்களிப்பைக் கண்டறிவதாகும்” என்பதே இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

இந்த சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்துமாறு ஜனாதிபதிக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்திருந்தது. ஜனாதிபதி சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு வழங்கும் பங்களிப்பும் சுற்றாடல் தொடர்பில் அவரிடம் இருக்கும் தூர இலக்கும் இந்த விசேட உரை வழங்கப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.

Related posts

மஹிந்தவை அவசரமாக சந்தித்தார் கோபால்

wpengine

எதிர்கட்சித் தலைவருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு…

wpengine

போக்குவரத்து விதிமுறைகள் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்..

wpengine