உள்நாட்டு செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது…



மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் மூன்றுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் இன்று(14) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்(28 வயது) பிரதேசத்தில் உள்ள மின் உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு 5000 ரூபா மற்றும் இரண்டு 1000 ரூபா போலி நாணயத்தாள்களை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது கடை உரிமையாளரால் அந்த நாணயத்தாள்கள் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதி சம்பந்தமாக மதவாச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தார்.

 

R.Rshma

Related posts

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் மஹிந்தவுக்கு அழைப்பு..

wpengine

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இரண்டு பேர் கைது…

wpengine