உள்நாட்டு செய்திகள்

சம்பூர், கடற்பிரதேசத்தில் சுமார் 05 கிலோவுக்கும் அதிகமான ஹெரோய்ன்…


திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் பல இடங்களில் நிலைத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 05 கிலோவும் 550 கிராம் நிறையுடைய 21 ஹெரோய்ன் பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 66 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவை கண்டெடுக்கப்பட்டதாகவும், வௌிநாட்டிலிருந்து கெண்டு வந்து விநியோகத்திற்காக இவற்றை புதைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

R.Rishma

Related posts

சீரற்ற காலநிலை தொடரும்…

wpengine

40 ஆவது தேசிய இளைஞர் விருது விழா நாளை(28)…

wpengine

இணைய வழியில் சான்றிதழ்கள்

wpengine