உள்நாட்டு செய்திகள்

எவன்காட் வழக்கு ஒத்திவைப்பு…



எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்புடைய வழக்குக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை காரணமாக, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிவரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை பராமரிக்க  எவன்காட் மெரிடைம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியமையையிட்டு, 1,140 கோடி ரூபாய் நட்டத்தை அரசாங்கத்துக்கு  ஏற்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்பட்ட போதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்குடன் ​தொடர்புடைய பிரதிவாதிகளாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ​கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிகரெட் விலையில் அதிகரிப்புடன் 15 % பெறுமதி சேர் வரியும் சேர்ப்பு.

wpengine

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இம்மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கைகள்…

wpengine

களுத்துறையில் 24 மணிநேர நீர்வெட்டு

wpengine