ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இரவு கூடிய எரிபொருள் விலைகள் காலையில் குறைவு…


எரிபொருளினை நேற்றைய(05) விலையில் விற்குமாறு ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உத்தரவு இட்டுள்ளார்.

எரிபொருள் விலையானது நேற்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தது.

அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும் (புதிய விலை 145 ) , 95 ஒக்டைன் வகை பெற்றோல் 7 ரூபாவினாலும் (புதிய விலை 155 ), அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை டீசலின் விலை 9 ரூபாவினாலும் (புதிய விலை 118), சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் (புதிய விலை 129 ) அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

இதன்பொருட்டு, ஐஓசி நிறுவனத்தின் விலைகளும் இன்று(06) அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

800 கோடிக்கு ரியல் மாட்ரிட் அணி ரொனால்டோ’வை விற்கத் தயார்…

wpengine

2019 உலகக் கிண்ணத்தினை வெல்லும் அணிகள் இவையாகத் தான் இருக்கும் – சங்கா ஆரூடம்…

wpengine

பேலியகொட துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர் விளக்கமறியலில்

wpengine