உள்நாட்டு செய்திகள்

புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் மேலும் குறைக்கப்படும்…



விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளின் குறைந்த பட்ச விலையை 64 ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இங்கிரியவில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த மருந்து வகைகளின் விலை இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவாக இருந்தது. அரசாங்கம் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா வரை குறைத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரு புற்றுநோய் மருந்து நிறுவனங்கள் இலங்கையில் இயங்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒரே டோஸ் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு அனுமதி

wpengine

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இன்று.. [அணி விவரம்]

wpengine

வாக்கெடுப்பு இன்றி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

wpengine