உள்நாட்டு செய்திகள்

செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்த இணக்கம்…



இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ந்து விநியோகம் செய்வதாக நீல் ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹக்மனை விபத்து – மற்றொரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

wpengine

ISIS குழுவில் இலங்கையர் 7 பேர் உள்வாங்கல்?

wpengine

இலங்கை மருத்துவ சபையானது சட்ட ஆலோசனைகளை பெறத் தீர்மானம்…

wpengine