உலக செய்திகள்

மலேசிய முன்னாள் பிரதமர் கைது…


மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் அண்மையில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த இரு மாதங்களில் நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

270 மில்லியன் டாலருக்கு மேலான மதிப்புடைய ஆடம்பரப் பொருட்களை புலனாய்வாளர்கள் நஜிப் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகனங்களை செலுத்தும் போது தொலைபேசியை உபயோகிப்பவர்களுக்கு தண்டப்பணம் இரட்டிப்பு…

wpengine

அமெரிக்க அதிபர் – வடகொரிய அதிபர் சந்திப்பு இம்மாத இறுதியில்…

wpengine

ஜோர்டான் எம்.பி’யின் மகன் ஐ.எஸ் தீவிரவாதப்படையில் கைகோர்ப்பு

wpengine