உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உதயங்க வீரதுங்க நீதிமன்றில் முன்னிலையாகத் தயார் – அவரது சட்டத்தரணி தெரிவிப்பு…



மிக் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில் இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ள உதயங்க வீரதுங்க நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு இன்று(29) அறிவித்துள்ளனர்.

அவரது சட்டத்தரணிகள் ஊடாக அவர் நீதிமன்றில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் ஊடாக கைது செய்யும் பகிரங்க பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Rishma

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு 1, 2ஆம் திகதிகளில் அவகாசம்…

wpengine

திருக்கேதீஸ்வர மனித எச்சங்களை ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவு

wpengine

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..

wpengine