உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…



பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 13ம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(28) பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் முறைப்பாட்டை விசாரிக்கும் அரசின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே வௌிநாடு சென்றுள்ளதால் இந்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் காணி ஒன்றில் உள்ள அனுமதியற்ற குடியிருப்பாளர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை வழங்குவதற்காக ஜெராட் மெண்டிஸ் எனும் வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா நிதி கேட்டு அச்சுறுத்தியதாக முன்னாள் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை – மலேஷியாவுக்கு இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்து..

wpengine

70 மோப்பநாய்களுக்கு போதைப்பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி…

wpengine

கறுப்புப் புத்தகத்தை சமர்ப்பிக்க கோருகிறார் அனுர

wpengine